ஆம்பளையே வேணாம்...என் வீட்ல ஆல்கஹால் இருக்கு!! கசப்பான அனுபவத்தை கூறிய யாஷிகா...
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா. இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார். 4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் யாஷிகா, பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பிரேக்-அப்புக்குப்பின்
அதில், நான் இப்போது ரொம்பவே சிங்கிளாதான் இருக்கேன். கடந்த 5, 6 ஆண்டுகளாகவே நான் யாருடனும் மிங்கிள் ஆகல, என் லாஸ்ட் பிரேக்-அப் என்னன்னு உங்க எல்லாருக்குமே நல்லாவே தெரியும். அந்த பிரேக்-அப்புக்குப்பின் நான் யாரோடவும் ரிலேஷன்ஷிப்பில் இலை. இந்த ரிலேஷன்ஷிப், காதல் இதெல்லாம் இப்போ எனக்கு தேவையே இல்லை. நான் இப்போது ரொம்பவும் சந்தோஷமா இருக்கேன், என்னை நானே காதலிச்சுட்டு சந்தோஷமா இருக்கேன்.

மேலும் பார்ட்டிக்கு இப்போதும் செல்கிறீர்களா என்ற கேள்வி, கடந்த 5 வருஷமா நான் எந்த பார்ட்டிக்கும் போகுறது இல்ல, ஆனா வழக்கம் போல எங்க வீட்லயே பார்ட்டி நடக்கும், வீட்லயே பார் செட்டப் இருக்கு, லைட் மியூசிக் இருக்கு, ஆல்கஹாலும் இருக்கும், யாரு வேணும்னாலும் வந்து ஜாலியா இருக்கலாம், ஆனா நான் குடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இயக்குநர்கள்
மேலும் நண்பர்கள் குறித்து பேசிய யாஷிகா, நண்பர்களுக்காக நாம எதுவும் செய்யக்கூடாதுங்கிறதை அனுபவபூர்வமா கத்துக்கிட்டேன். அதுவும் இந்த சினிமா நிறைய விஷயத்தை எனக்கு கத்து கொடுத்துவிட்டது.

எனக்கு சில இயக்குநர்கள் நண்பர்களாக இருந்தாங்க, அவங்க என்கிட்ட வந்து கதை சொல்லும்போது வேறமாதிரி, எனக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்குற மாதிரி கதையை சொல்வாங்க, நானும் அட்வான்ஸ் வாங்கிட்டு செட்டுக்கு போய் பார்த்தாதான் தெரியும், அவங்க சொன்ன கதைக்கும் நான் நடிக்கிற கேரக்டருக்கும் சம்பந்தமே இருக்காது.
கமிட்டாகிட்டோமே, வேற வழியில்லையேன்னு அந்த படங்கள்ல நடிக்க வேண்டியதாயிரும். அதனால் நண்பர்களுக்காக நீங்க உங்க கேரியர்ல எதுவும் விட்டுக்கொடுக்காதீங்க என்று கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் யாஷிகா ஆனந்த்.