ஈரான் காமெனி உயிரிப்பு!! நடுவிரலை காட்டி கொண்டாடிய நடிகை யாஷிகா ஆனந்த்
ஈரான் காமெனி உயிரிப்பு
ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக கூறி குற்றம்சாட்டி, அமெரிக்கா , இஸ்ரயேல் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஈரானின் உச்ச தலைவரான அயத்துல்லா அலி காமெனி உயிரிழந்தார்.
ஈரானின் பாதுகாப்பு, ராணுவத் தளபதி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் 160க்கும் மேற்பட்ட மாணவிகள் உயிரிழந்தனர். இதற்கு பல நாட்டு தலைவர்கள் வன்மையாக கண்டித்து வருகிறார்கள்.

உலக நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் - அமெரிக்கா - இஸ்ரயேல் போல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நடிகை யாஷிகா, ஈரான் தலைவர் காமெனி உயிரிழந்ததை கொண்டாடும் விதமாக அவரின் புகைப்படத்தை பந்தால் எட்டி உதைப்பது போல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
இதை பாராட்டி சிலர் கருத்து தெரிவித்திருந்தாலும், இது சர்வதேச சட்ட விதிமீறல், மனித நேயமற்ற படுகொலை இதை ஆதரிப்பதா? என்று கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். யாஷிகாவிற்கு இணையத்தில் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு பலரும் மெசேஜ் செய்து வந்துள்ளனர்.
யாஷிகா ஆனந்த்
அதைபார்த்த யாஷிகா, ஒருவர் மனித உரிமைகளின் எதிரியாக இருந்தவராக இருந்தும், அவருக்காக மக்கள் ஏன் இவ்வளவு கண்ணீர் சிந்துகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. முதலில் அவர்களின் முன்னோர்கள் அழகான பெர்ஷியா நாட்டை காலனித்துவப்படுத்தி அழித்தார்கள். அப்போது அந்த நாடு நல்லநிலையில் இருந்தது.

மக்கள் ஏற்கனவே நவீனமுறையில் முன்னேறிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். 70களில் காமெனி ஆட்சிக்கு வந்து, குறிப்பாக பெண்களின் உரிமைகளில் பாதிப்பை ஏற்படுத்தினார். சிறுமிகளின் திருமண வயதை 13 ஆக குறைத்த இந்த மனிதருக்கு எதிராக உலகம் ஏன் போகவில்லை, அவரை பெண்களை ஒடுக்கியவர்.
அந்த நிலத்தின் உரிமையாளர்களாக இருந்த பெர்ஷியர்களின் உரிமைகளை பறித்தவர் என்று யாஷிகா பதிவிட்டதோடு, நடுவிரலை காட்டியபடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நீங்கள் என்னை வெறுத்தாலும் எனக்கு கவலையில்லை என்று கூறி கேப்ஷனையும் பகிர்ந்துள்ளார்.