யோகிபாபு படத்தில் ஏற்பட்ட பிரச்சனை!! கோடி காசுக்காக நிர்வாணமாக்கி தயாரிப்பாளர் செய்த காரியம்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை யோகிபாபு. பல படங்களில் காமெடியனாகவும் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் யோகிபாபு. அப்படி யோகிபாபு நடிப்பில் கார்த்திக் என்பவர் தயாரித்த ஷூ என்ற படம் வெளியாக தோல்வியை சந்தித்தது.
விநியோகஸ்தர் மதுராஜ்
இப்படத்தின் ஓடிடி மற்றும் டிஜிட்டல், வெளிமாநில ரைட்ஸ்-ஐ தயாரிப்பாளர் கார்த்திக் 1.10 கோடிக்கு விநியோகஸ்தர் மதுராஜ் என்பவரிடம் விற்றுள்ளார். மதுராஜ் முன்பணமாக தயாரிப்பாளரிடம் 20 லட்சம் கொடுத்துள்ளார்.
பின் மீதமுள்ள பணத்தை இரு தவணைகளாக தருகிறேன் என்று மதுராஜ் கூறியுள்ளார். ஆனால் ஷூ படம் தோல்வியடைந்ததாக் யாரும் பார்க்காத சூழலில் தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க இழுத்தடித்துள்ளார் மதுராஜ்.
இதனால் கோபப்பட்டு மதுராஜ் அலுவலத்திற்கு ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.

நிர்வாணப்படுத்தி, சித்தவதை
அலுவலகத்தில் இருந்த கோபி கிருஷ்ணா மற்றும் பென்சரை கடத்திக்கொண்டு சென்று நிர்வாணப்படுத்தி, சித்தவதை செய்து மதுராஜிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார் தயாரிப்பாளர் கார்த்திக்.
இருவரின் ஏடிஎம் கார்ட்களை பறித்து 70 ஆயிரம் ரூபாயை எடுத்து பின் இருவரையும் வெட்டி தாம்பரம் பகுதியில் கண்ணைக்கட்டி போட்டுச்சென்றுள்ளனர். இதில் கோபி கிருஷ்ணா மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பென்சர் என்பவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
மதுராஜ் போலிசாரிடம் புகாரளிக்க சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். தயாரிப்பாளர் கார்த்திக் கூலிப்படையை வைத்து இந்த சம்பவத்தை செய்திருக்கிறார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் கார்த்திக் இப்படியொன்றும் நடக்கவில்லை என்றும் தன்மீது பழி சுமத்தியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் தற்போது தயாரிப்பாளர் கார்த்திக் சிங்கபூரில் இருப்பதால் வேண்டுமென்றே யாரோ என் பெயரை கெடுக்க இப்படியான வேலையை செய்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
