என்னது பீஸ்ட் கூர்கா 2-ஆ? வம்பில் சிக்க வைத்தவர்களுக்கு பதிலடி கொடுக்காமல் எஸ்கேப்பகிய யோகிபாபு..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்ற இடத்தினை பெற பல காலம் போராடி அந்த இடத்தை முன்னிலைப்படுத்தி வருபவர் நடிகர் யோகிபாபு. வாய்ப்பிற்காக சைட் ஆக்டர், சிறு கதாபாத்திரம் என சிறு படங்களில் நடித்து வந்த யோகிபாபு முன்னணி நட்சத்திரங்களுக்கு இணையாக கோடியில் சம்பளம் வாங்கும் காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் லீட் ரோலில் நடிக்க ஆரம்பித்து தற்போது அவரை வைத்தே படங்களை இயக்கி ஹிட் கொடுத்தும் வருகிறார்கள். அப்படியான உயரத்தை தொட்ட யோகிபாபு நடித்த கூர்கா படம் ஒரளவிற்கு வெற்றிப்பெற்றது.
மால் ஹைஜேக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இப்படத்தை வைத்து இயக்குனர் நெல்சன் விஜய்யின் பீஸ்ட் படத்தினை எடுத்துள்ளார் என்ற விமர்சனம் எழுந்து வந்தது. இதற்கு முழுக்க முழுக்க இல்லை என்று நெல்சன் தெளிவு படுத்தியிருந்தார்.
இந்நிலையில் டாக்டர் பட்டம் வாங்கிய யோகிபாபுவிடன் பத்திரிக்கையாளர்கள் கூர்கா 2-ஆ பீஸ்ட் என்று கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு யோகிபாபு ஏங்க நீங்க வேற என்று சிரித்தப்படியே சென்றுள்ளார். பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார் யோகிபாபு என்பது குறிப்பிடத்தக்கது.
#Yogibabu Funny Reply On #Beast And #Gurkha2 Troll ??? pic.twitter.com/qOqRSXazQ8
— chettyrajubhai (@chettyrajubhai) April 10, 2022