இயக்குனர் கொடுத்த டார்ச்சரால் தலைத்தெறிக்க ஓடிய நடிகைகள்.. பூஜா ஹெக்டேவை விட பெரிய அடியோ
தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைககளை விட அக்கடத்தேசத்து நடிகைகளின் இறக்குமதி அதிகரித்து வருகிறது. அப்படி அறிமுகமாகும் மற்ற மொழிப்பேசும் நடிகைகள் ஒரே படத்தில் நடித்து பந்தா காட்டுவதுண்டு.
அப்படி விஜய் படமான பீஸ்ட் படத்தில் அறிமுகமாகி பெரியளவில் தமிழில் பேசப்பட்டவர் நடிகை பூஜா ஹெக்டே. முகமூடி படத்தால் தமிழில் வரவேற்பு கிடைக்காததால் 10 ஆண்டுகள் கழித்து தமிழில் விஜய் படத்தில் அறிமுகமாகினார்.
ஆனால், பீஸ்ட் படம் இயக்குனரின் தவறால் பெரியளவில் நம்பி ஏமாந்தது தன் பூஜாவுக்கு கிடைத்த மிச்சம். இதனால் தமிழ் பக்கமே தலைக்காட்டக்கூடாது என்று இந்தி வரை சென்று தலைதெறிக்க ஓடினார். இவரைப்போல அதிக எதிர்ப்பார்ப்புகளின் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி செட்டி.
சொந்த வாழ்க்கையில் விவாகரத்து என்று பல சிக்கல்களில் சிக்கிய இயக்குனர் பாலா அதையெல்லாம் மறந்து சூர்யாவுடன் வணங்கான் படத்தை இயக்கி வந்தார். அதில் அக்கடத்தேசத்து 18 வயது நிரம்பிய கீர்த்தி செட்டியை வரவேற்றார் பாலா.
ஆனால் அவர் கொடுத்த கால்ஷீட்டை தாண்டி படப்பிடிப்பு இன்னும் முடியாமல் இருக்கிறது. இது மட்டுமில்லாமல் படப்பிடிப்பில் பாலா கொடுக்கும் டார்ச்சரால் எக்கச்சக்கமாக இருந்ததால் கீர்த்தி செட்டி தன்னுடைய பாகத்தை முடித்துவிட்டு இனிமேல் இந்த பக்கமே வரக்கூடாது என்ற முடிவில் இருந்துள்ளாராம்.
இதனால் என்னுடைய கால்ஷீட் தான் வீணாகிப்போனது என்றும் கோபத்தில் இருந்துள்ளாராம்.