கென் கருணாஸின் யூத் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Box office
Youth (2026)
By Karthick Raja
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் யூத். கடந்த 19ஆம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தில் சுராஜ், தேவதர்ஷினி, நளினி, அனிஷ்மா அனில்குமார் மற்றும் மீனாட்சி ஆகியோர் நடித்திருந்தனர்.

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும் அப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், கென் கருணாஸின் யூத் திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இரண்டு நாட்களில் இப்படம் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
