பிரியா ஆனந்த் முதல் இளம்பெண்கள் வரை!! யூடியூபர் பிரஷாந்தின் லீலைகள் அம்பலம்..
சினிமாவில் வெளியாகி படங்களை விமர்சித்து யூடியூப்பில் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பிரஷாந்த் ரங்கசாமி. பல லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கும் பிரஷாந்த் ரங்கசாமி பெண்களிடம் அத்துமீறி பேசிய விஷயம் தற்போது மிகப்பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடிகை பிரியா ஆனந்த் தன்னுடைய கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்த போது மொரட்டு சிங்கிள்ஸ் பாவம் என்று கமெண்ட் செய்து பிரியா ஆனந்தையும் டேக் செய்து பதிவு போட்டார். கடுப்பான பிரியா ஆனந்த், பாண்டா என்று கூறி பதிலடி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து பல பெண்களிடம் அத்துமீறி பேசிய பிரஷாந்த் ரங்கசாமியின் சேட்டில் ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை வைத்து அவரை நெட்டிசன்கள் கலாய்த்து திட்டியபடி வருகிறார்கள்.
அதைதாண்டி தற்போது #SaveGirlsFromPrashanth ஹாஷ்டேக் செய்து பெண்களை பிரஷாந்த் ரங்கசாமியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறி மீம்ஸ் புகைப்படங்களையும் இணையத்தில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.




