காதல் தோல்வியால் 21 வயதான பெண் யூடியூபர் எடுத்த தவறான முடிவு!! அதிர்ந்த தாயார்..

Youtube Gossip Today Hyderabad Relationship
By Edward Mar 02, 2026 12:30 PM GMT
Report

பெண் யூடியூபர்

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், விசாகபட்டினத்தை சேர்ந்த கோமலி என்ற பெண், தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படத்திக்கொண்டிருந்தார். ஹைதராபாத் வந்தவுடன் கல்லூரி வாழ்க்கை, வெளியே பார்க்கும் அனைத்தையும் யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டு தொடக்கம் முதலே நல்ல வரவேற்பை பாலோயர்ஸ்களையு பெற்றார்.

இச்சூழலில் திங்கட்கிழமை அதிகாலையில், குவைத்தில் வசிக்கும் தாய் பி சத்ய லட்சுமிக்கு, ஐ லவ் யூ மம்மி சோ மச் என்றும் தம்பியை ஒழுங்காகப்பார்த்துக் கொள்ளுமாறு கூறியும் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்.

காதல் தோல்வியால் 21 வயதான பெண் யூடியூபர் எடுத்த தவறான முடிவு!! அதிர்ந்த தாயார்.. | Youtuber Breakup Bonu Komali Took Extreme Step

அதிர்ச்சியான தாயார்

இதனால் அதிர்ச்சியான தாயார், கோமலிக்கு கால் செய்தபோது சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டதாலும் பலமுறை போனை எடுக்கவில்லை என்பதாலும் தோழிகளுக்கு உடனே இதுகுறித்து கேட்டு என்னாச்சு என்று சொல்லுபடி கேட்டுள்ளனர்.

நண்பர்கள் கோமலியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கோமலி, மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனே போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஏணி, புடவை ஆகியவற்றை மீட்டனர். காதல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோமலி இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதல் தோல்வி

கடந்த 3 ஆண்டுகளாக 27 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் கோமலி அந்நரும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்தானாம். இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரேக்-அப் செய்துள்ளனர். இதை தாங்க முடியாத கோமலி 3 முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்பது போலிசுக்கு தெரியவந்துள்ளது.

காதல் தோல்வியால் 21 வயதான பெண் யூடியூபர் எடுத்த தவறான முடிவு!! அதிர்ந்த தாயார்.. | Youtuber Breakup Bonu Komali Took Extreme Step

அப்போதே உறவினர்களும் நண்பர்களும் தான் அவரை மீட்டு அவருக்கு மருத்துவ கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டது. இப்படியிருக்கையில், உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த கோமலி, உறவினர்கள் வெளியே சென்றதும் தனது மாஜி காதலருக்கு போன் செய்து வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டில் இருவருக்கும் காதல் மற்றும் திருமணம் தொடர்பாக சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.

அந்நபர் ரூமில் இருந்து வெளியேறும் வீடியோ, அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்தே கோமலி தற்கொலை முடிவை எடுத்துள்ளார். செல்போன் ரெக்கார்ட்ஸ், சிசிடிவி, மெசேகள், நண்பர்கள் அக்கம் பக்கத்தினரின் வாக்குமூலம் என்று விசாரணையை போலிசார் தொடங்கியிருக்கிறார்கள்.

தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் : 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.