மதம் மாறியப்பின் இளையராஜாவை அசிங்கப்படுத்திய மகன் யுவன்? 80 வயசுலயும் கஷ்டப்படுத்துனா எப்படி..

Gangai Amaren Ilayaraaja Yuvan Shankar Raja
By Edward Jun 13, 2022 09:30 AM GMT
Report

இந்திய சினிமா வரலாற்றில் 40 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து பல ஆயிரம் கச்சேரிகளை நடத்தி இசையின் நாயகனாகவும் இசைஞானியாகவும் திகழ்ந்து வருகிறார் இளையராஜா.

சமீபத்தில் 80 வயதை தாண்டிய இளையராஜாவுக்கு குடும்பத்தின் சார்ப்பாக திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவிலில் இளையராஜாவிற்கு சதாபிஷேகம் நடைபெற்றது.

இதற்காக அந்த ஆலயத்தில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் யாகசாலை பூஜை செய்யப்பட்டு ஆயுள் விருத்தி வேண்டி 85 கலசங்கள் வைக்கப்பட்டு சதாபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சிக்கு இளையராஜா குடும்பத்தினர் மற்றும் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, இயக்குனர் பாரதிராஜா, தம்பி கங்கை அமரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தந்தையின் வாழ்நாளில் இப்படியொரு நிகழ்வு நடைபெறுவதை துளிக்கூட யோசிக்காத இளையராஜாவின் மகன் நிகழ்ச்சிக்கு வரவில்லையாம். ஏற்கனவே இருவருக்கும் இடையில் பல பிரச்சனைகள் எழுந்து சமாதானமாகியும் இருக்கிறது.

ஆனால் யுவன் சங்கராஜா இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டார். இது இளையராஜாவுக்கு பிடிக்காமல் போனதால் சிறு கருத்து வேறுபாடு தந்தை மகனுக்குள் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தந்தையின் சதாபிஷேகத்திற்கு யுவன் சங்கராஜா வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்து கோவிலில் முஸ்லீம் சமயத்தை சார்ந்தவர் சடங்குகளில் வழிப்படக்கூடாது என்பதால் தான் அவர் வராமல் இருந்துப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் யுவன் மீது கடும் அதிருப்தியில் இசைஞானி இருப்பதாகவும் தந்தைடைவிட அந்தந்த கோட்பாடுகள் தான் முக்கியமா என்று கேட்டுள்ளாராம்.