யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை.. யுவன் வெளியிட்ட அறிக்கையால் அதிர்ச்சி..

movie director music
By Jon Jan 26, 2021 11:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. தனக்கென ஒரு இசை அமைப்பை கொடுத்து பல ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் பணவர்த்தனை குறித்த அவர் வெளியிட்ட அறிக்கை இணையத்தில் வெளியாகி பேசப்பட்டு வருகிறது.

அதில் அவர் கூறியதாவது, எனது நிறுவனங்களான ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் சார்பில் நான் ஒரு அதிகாரபூர்வமான தகவலை தெரிவித்துக் கொள்கிறேன். பணம் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து நான் யாருக்கும் எந்தவித அதிகாரத்தையும் அளிக்கவில்லை.

அவ்வாறு என் பெயரிலோ அல்லது எனது நிறுவனத்தின் பெயரிலோ யாரேனும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அல்லது ஒப்பந்தம் மேற்கொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. மேலும் இதுதொடர்பாக கூறியதில், எனது ஒய் எஸ் ஆர் பிரைவேட் ஃபிலிம்ஸ் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் என்னைத் தவிர பணப் பரிவர்த்தனை செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

அனைவரின் ஆதரவுக்கும் நன்றி" என யுவன் தெரிவித்துள்ளார்.



Gallery