அப்போ எம்.எஸ்.தோனி... இப்போ யுவராஜ் சிங், என்ன மேட்டர்... விசில் போடு
Yuvraj Singh
By Yathrika
யுவராஜ் சிங்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் இப்போதும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்கள். பிடித்த கிரிக்கெட் வீரரின் பிறந்தநாள் வந்தாலே அவர்கள் செய்த சாதனைகள் குறித்து ரசிகர்கள் பகிர்வார்கள்.
அப்படி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தான் யுவராஜ் சிங்.
பல சாதனைகளை நிகழ்த்தி வந்த இவரது வாழ்க்கையில் புற்றுநோய் ஒரு இடியாய் வந்தது, ஆனால் நோயை தைரியமாக எதிர்க்கொண்டு மீண்டும் களத்தில் இறங்கி சாதித்தார்.
எம்.எஸ்.தோனியை தொடர்ந்து தற்போது யுவராஜ் சிங் வாழ்க்கை படமாக்கப்பட உள்ளதாம். தற்போது தயாரிப்பாளர் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது, யார் யுவராஜ் சிங்காக நடிக்கப்போவது என்பதை பொறுத்திருந்து காண்போம்.