தோனி இடத்தில் நான் தான் இருந்திருக்கனும்? பல ஆண்டு உண்மையை உடைத்த யுவராஜ் சிங்..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனியை பற்றி அறியாத தகவல் யாரும் இருக்கமுடியாது. அவர் வாழ்க்கை வரலாறு படமே அவரின் திறமையை பற்றி கூறியது.

ஆனால், அவருக்கும் யுவராஜ் சிங்கிற்கும் இடையில் என்ன சண்டை என பலமுறை கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு விடை தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பேட்டியொன்றில் கூறியுள்ளார். 2007ல் 50ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி டிராவிட் தலைமையில் லீக் சுற்றிலேயே வெளியேறியது.

அதில் யுவராஜ் சிங்கும் பங்குபெற்று விளையாடினார். கடும் விமர்சனத்திற்கு அப்போது அனைத்து வீரர்களும் சந்தித்தோம். இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து டிராவிட் விலகினார். அவருக்கு அடுத்த கேப்டனாக டி 20 உலக கோப்பையில் நான் தான் இருப்பேன் என்று நினைத்தேன். 3 ஆண்டுகளே விளையாடிய எம் எஸ் தோனிக்கு இந்திய கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது.

அவர் கேப்டனான தோனி அதை நல்லவிதமாக பயன்படுத்தி அறிமுகத்தொடரையும் கைப்பற்றி கொடுத்தார். அதாவது டி 20 உலக கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அதிலும் நான் சிறப்பாக பங்கை அளித்தேன் என்று கூறியுள்ளார். மேலும், அணியின் கேப்டனாக யார் இருந்தாலும், அதனை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

அது கங்குலியாக இருந்தாலும், டிராவிட்டாக இருந்தாலும், அல்லது எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். அதன் முடிவில், நீங்கள் அணியில் ஒரு வீரராக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவோம் என்று மனதில் இருந்த பல ஆண்டு ரகசியத்தை போட்டுடைத்துள்ளார் யுவராஜ் சிங்.

Gallery Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்