குடிப்பழக்கம், விவாகரத்து..26 நாள் மறுவாழ்வு மையத்தில் மோசமான நிலையில் யுஸ்வேந்திர சாஹல்..
2020 டிசம்பர் 22 ஆம் தேதி யூடியூபர், நடன இயக்குநர் மற்றும் பல் மருத்துவரான தனஸ்ரீ வர்மாவை, யுஸ்வேந்திர சாஹல் திருமணம் செய்து கொண்டார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வந்த தன் மனைவியை 4 ஆண்டுகளுக்கு பின் இருவரும் பிரிவதாக கூறி விவாகரத்து செய்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விவாகரத்து, குடிப்பழக்கம் குறித்து பேசியுள்ளார்.
குடிப்பழக்கம், விவாகரத்து
அதில், ஆரம்பத்தில் இளம் வயதில் நண்பர்களுடன் பார்ட்டிகளில் குடித்தேன், ஆனால் விவாகரத்துக்குப்பின் என் மனநிலை மிகவும் மோசமானது. குடிப்பழக்கம் எல்லைமீறிப் போனது.
இப்படியே சென்றால் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டே என் கையை விட்டுப்போய்விடும் என்று உணர்தேன். உடனடியாக மதுவில் இருந்து விடுபட மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தேன். அங்கு 26 நாட்கள் தங்கி சிகிச்சைப் பெற்றேன். அந்த முடிவு என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டேன்.

என் வாழ்க்கையை மக்கள் பொதுவெளியில் விமர்சித்தது மனதை மிகவும் காயப்படுத்தியது. இதனால் எனக்கு தீவிர பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. அப்போது என் இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும், முகம் ஒரு மாதிரியாக சுருங்கி, உதடு ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும். என்னால் சரியாகப் பேசக்கூட முடியாது.
நான் 100 சதவீதம் முழு மனநிலையில் இல்லாததால் அணி பாதிக்கப்படக்கூடாது என்று கிரிக்கெட்டில் இருந்து சில காலம் இடைவெளி எடுத்தேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் சாஹல்.