ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு படம்!! ஹீரோ யார் நடித்தால் நல்லா இருக்கும்?

Businessman Ratan Tata
By Edward Oct 12, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

ரத்தன் டாடா

டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கடந்த சில நாட்களுக்கு முன் தன்னுடைய 86 வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். தற்போது ரத்தன் டாடாவின் வாழ்க்கையை படமாக ஜீ குழுமம் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். ஜீ நிறுவனத்தின் சி இ ஓ புனித் கோயங்கா இதனை அறிவித்துள்ளார்.

ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு படம்!! ஹீரோ யார் நடித்தால் நல்லா இருக்கும்? | Zee Proposes Biographical Film Ratan Tata S Life

வாழ்க்கை வரலாறு படம்

ரத்தன் டாடாவின் குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெற இருப்பதாகவும் அனுமதி கிடைத்தப்பின் ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

இளைஞர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றில் ரத்தன் டாடாவாக எந்த ஹீரோ நடித்தால் சரியாக இருக்கும் என்று நெட்டிசன்கள் இப்போதில் இருந்தே சில நடிகர்களின் பெயரை கூறி வருகிறார்கள்.