கோடிக்கணக்கில் இந்த விளம்பரம் தேவையா?பிரபல நடிகை, நடிகரை வைத்து சொமாட்டோ நிறுவனம் செய்த செயல்!

zomato KatrinaKaif HrithikRoshan
By Edward Sep 03, 2021 03:19 AM GMT
Report

இந்தியாவின் உணவுகளை ஆர்டர் செய்து அதை டெலிவரி செய்யும் பணியை செய்து வருவது சொமாட்டோ நிறுவனம். அதற்காக விளம்பரங்கள் தொலைக்காட்சி மற்றும் இணையம் வழியாக பல நடிகர் நடிகைகளை வைத்து பிரமோட் செய்து வருகிறது. அந்தவகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் நடிகை காத்ரினா கைஃப் போன்றவர்களை வைத்து சமீபத்தில் இரு விளம்பர வீடியோவை வெளியிட்டது சொமாட்டோ நிறுவனம்.

அதில் தங்களது முதல் ஹீரோ என்னும் கான்சப்ட்டை வைத்து ஹிருத்திக் ரோஷன், காத்ரினா கைஃப் வீட்டில் டெலிவரி செய்யும் ஊழியர்கள் அவர்களை பார்த்து செல்ஃபி எடுக்க அசைப்பட்டு கேட்க இதோ வருகிறேன் என்று கூறி உள்ளே சென்று விடுவார்கள். டெலிவர் பார்ட்னருக்கு அடுத்த ஆர்டர் வந்துவிடுகிறது. ஹிரித்திக் ரோஷனுக்காக காத்திருக்க முடியாது நமக்கு நம்முடைய கஸ்டமர் தான் ஹீரோ என அவர் வருவதற்குள் கிளம்பி சென்று விடுகிறார்.

  இந்த விளம்பரம் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து தற்போது வரை மீம் கிரியேட்டர்ஸ்கள் இதை வச்சு செய்கின்றனர். பதில் அளித்துள்ள சோமேட்டோ நிறுவனம் எங்களுக்கு டெலிவரி ஊழியர்கள்தான் முக்கியம் என்பது போன்று அந்த விளம்பரத்தில் காட்டியுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளனர். அதற்குப் பின் தான் கஸ்டமர் என்பது போன்றும் அவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.