அஜித்திற்கு ஆபத்தாய் இருக்கும் ரசிகர்களின் தொடர் செயல்கள்! போட்டோ உள்ளே

Report
27Shares

அஜித் சினிமாவில் பல மடங்கு ரசிகர்களை பெற்றவர். இத்தனைக்கும் பல வருடங்களாக எந்த ரசிகர் மன்றங்களும் கிடையாது. சில சிக்கல்கள் வந்த போது அவர் அதை நீக்கிவிட்டார்.

ஆனால் இன்று அப்போது விட பல எண்ணிக்கையிலான ரசிகர்கள் திரண்டு விட்டார்கள். சினிமா பிரபலங்கள் கூட அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். டார்கெட் வைத்து சமூக வலைதளங்களில் போட்டி போடுகிறார்கள்.

சமீபத்தில் அவரின் மகள் அனோஷ்கா புகைப்படத்தை ஜெயலலிதா போல் டிசைன் செய்து போஸ்டராக ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இதனை அடுத்து அவரின் மகன் ஆத்விக்கை குத்து சண்டை வீரர் போல பெரியளவில் கட்டவுட் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மெகா சைஸ் காலண்டரை பிரத்யேகமாக தயாரித்து வெளியிட்டுள்ளார்கள். இதன் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதிலும் அட்டகாசம் அஜித் புகைப்படத்தை வைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆனால் அவர் இதையெல்லாம் விரும்புவதில்லை என்பதே உண்மை. விமர்சனங்களுக்கு கூட அவர் செவி சாய்ப்பதில்லை என்பது மீண்டும் சிவாவுடனான கூட்டணியிலேயே உறுதியாகிவிட்டது.

1348 total views