குரங்குடன் நடிக்கும் பிரபல நடிகை நடிகர்! படத்திற்கு பெயர் என்ன தெரியுமா

Report
56Shares

அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் ஜி.வி.பிரகாஷுடன் 100 %காதல் படத்தில் கமிட்டாகியுள்ளார். இது தமிழில் இவரின் முதல் படம்.

சமீபத்தில் அவர் நடிகர் ஜீவாவுடன் மேலும் ஒரு தமிழ் படத்தில் கமிட்டானதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தை சாண்டி என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு கொரில்லா என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஒரு சிம்பன்ஸி குரங்கு ஒன்று நடிப்பதாக தகவல் வந்தது. தற்போது இக்குரங்கின் பெயர் காங் என சொல்லப்படுகிறது.இக்குரங்கிற்கு பிரத்யேகமாக தாய்லாந்து நாட்டில் பயிற்சி கொடுத்திருக்கிறார்களாம்.

இதில் ஆர்.பாலாஜியும் நடிக்க சாம் இசையமைக்கிறாராம். மேலும் விவேகம் படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபன் தற்போது இதில் சேர்ந்துள்ளார்.

2546 total views