விக்ரம் மகன் துருவ்க்கு ஜோடி இந்த பிரபலத்தின் மகளா?

Report
182Shares

நடிகர் விக்ரம் தன் மகன் துருவ்வை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார். வெளிநாட்டில் படித்து வரும் துருவ் தற்போது வர்மா படம் மூலம் ஹீரோவாகிறார்.

அர்ஜூன் ரெட்டி தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படத்தை பாலா இயக்குகிறார். பாலா தன் படத்தின் ஹீரோவை அப்படியே வித்தியாசமாக மாற்றிவிடுவது வழக்கம்.

சமீபத்தில் துருவ்வை பாலா எப்படி மாற்றியிருக்கிறார் என அண்மையில் வெளியான புகைப்படம் பேசவைத்தது. இந்நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை கௌதமியின் மகள் சுப்பலட்சுமி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இது இன்னும் உறுதிப்படவில்லை. ஏற்கனவே கௌதமி தன் மகளை சினிமாவில் இறக்கிவிட ஏற்பாடுகளை செய்து வருவதாக சில தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

6158 total views