கண­வனை விடவும் நாய்­களே பெரிது

Report
193Shares

தன்னைத் திரு­மணம் செய்து 27வருட கால­மாக தன்­னுடன் இணை பிரி­யாது வாழ்ந்த தனது கண­வரை விடவும் தன்னால் மீட்­கப்­பட்டு வளர்க்­கப்­பட்டு வந்த நாய்­களே பெரி­தெனக் கருதி தனது கண­வ­ரி­ட­மி­ருந்து விவா­க­ரத்துப் பெற மனை­வி­யொ­ருவர் தீர்­மா­னித்த விநோத சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

சப்போக் பிராந்­தி­யத்தில் பம்ஹாம் எனும் இடத்தைச் சேர்ந்த லிஸ் ஹஸ்லாம் (49 வயது) என்ற பெண்ணே தனது கண­வ­ரான மைக்கை (53 வயது) விடவும் நாய்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து கண­வ­ரி­ட­மி­ருந்து விவா­க­ரத்துப் பெற்­றுள்ளார்.

நாய்கள் மீது அபி­மானம் கொண்ட லிஸ் அநா­த­ர­வாகத் திரிந்த 30 நாய்­களை மீட்­டெ­டுத்து தனது செல்லப் பிரா­ணி­க­ளாக வீட்டில் வளர்க்க ஆரம்­பித்­தி­ருந்தார்.

ஆரம்­பத்தில் இரு படுக்கை அறை­களைக் கொண்ட தமது பண்ணை வீட்டில் ஓரிரு நாய்­களை அவர் வளர்த்தபோது அது தொடர்பில் கண்­டு­கொள்­ளாது இருந்த மைக், நாய்­களின் தொகை வீட்டில் பல்கிப் பெரு­கி­ய­தை­ய­டுத்து பொறுமையிழந்தார்.

இந்­நி­லையில் அவர் தனது மனை­வி­யிடம் நானா? அல்­லது நாய்­களா முக்­கியம் என இரண்டில் ஒரு முடிவு எடுக்­கு­மாறு எச்­ச­ரிக்கை விடுத்தார்.

இதன்­போது தனது நாய்­களை பிரிய விரும்­பாத லிஸ் நாய்­களே பெரிது என திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து மைக் லிஸ்­ஸி­டமி­ருந்து விவா­க­ரத்துப் பெற்­றுள்­ளார். 1991ஆம் ஆண்டு திரு­மண பந்­தத்தில் இணைந்த அந்தத் தம்­ப­திக்கு 22 வயதில் ஒரு மகன் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

லிஸ்ஸால் வளர்க்­கப்­படும் நாய்­களில் குறைந்­தது 15 நாய்கள் உடல் குறை­பா­டு­களைக் கொண்­டுள்ளன. அந்த நாய்­களில் 5 நாய்கள் செவிட்டுத் தன்­மையைக் கொண்­டுள்­ள­துடன் இரு நாய்கள் தலா ஒரு கண்ணை மட்­டுமே கொண்­டுள்­ளன. அதே­ச­மயம் ஒரு நாய் மூளைச் சேதத்­திற்­குள்­ளாகி நிதா­ன­மற்ற நிலையிலுள்­ளது

6805 total views