என்னை அறிந்தாலை தொடர்ந்து விஸ்வாசத்திலும் இணைந்த நட்சத்திரம்- யார் தெரியுமா

Report
8Shares

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து 2015ல் ரீலிஸான படம் தான் என்னை அறிந்தால். திரிஷா, அனுஷ்கா என இரு ஹீரோயின்கள் நடித்திருந்த இப்படத்தில் அஜித்தின் மகளாக கேரளாவை சேர்ந்த குழந்தை நட்சத்திரம் அனிகா நடித்திருந்தார்.

படம் ரீலிஸான பிறகு இவரது நடிப்பு பேசப்பட்டது. அதனால் நானும் ரௌடிதான், மிருதன் போன்ற தமிழ்பட வாய்ப்புகள் அவரை தேடிவந்தன.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அஜித் தற்போது தொடர்ந்து நாலாவது முறையாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தில் நடிக்க அனிகாவை அழைத்துள்ளனர்.

இப்படத்தில் அவர் அஜித்தின் மகளா இல்லை வேறு எதாவது கதாபத்திரமா என்பது தெரியவில்லை. மேலும் இப்படத்தில் முதன்முதலாக டி.இமான் இசையமைக்க இருக்கிறார்.

771 total views