வார்டு கவுன்சிலராக இருந்த பெண்! வயிற்று பிழைப்பிற்காக பஸ் ஸ்டாண்டில் பழம் விற்கும் சோகம் - பின்னணி உண்மை இதோ

Report
66Shares

அரசியலில் ஊழல் செய்து பல தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் அரசியல் வாதிகள் உலாவும் காலம் இது. ஞாயமான அரசியல் வாதிகளை காண்பதே கானல் நீராக போய்விட்டது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் முன்னாள் வார்டு கவுன்சிலராக இருந்த மாரியம்மா தான் தற்போது லேட்டஸ்ட் டிரெண்ட். ஜெயலலிதாவின் மீது தீவிர பக்தி கொண்ட இவர் கட்சி பணியாற்றிவந்துள்ளார். விசயம் அறிந்த ஜெயலலிதா அவர் வார்டு கவுன்சிலராக பதவி கொடுத்துள்ளார்.

அதுவும் தேர்தலில் போட்டியிட்டு 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியடைந்து 5 வருடம் பதவியில் இருந்துள்ளார். பதவி காலத்தில் மாரியம்மா மற்ற அரசியல் வாதிகளை போல எதுவும் பெரிதாக சம்பாதிக்க வில்லையாம். அவரின் கணவர் ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர் தான்.

சில வருடங்களுக்கு முன் அவரின் கணவர் மாரடைப்பால் இறந்துள்ளார். இவர்களுக்கு ஒரே ஒரு மகள் தானாம்..

இதனால் தன்னுடைய வயிற்று பிழைப்பிற்காக மதுரை பஸ் ஸ்டாண்டில் பழம் விற்று பிழைப்பு நடத்தி வருகிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்

2749 total views