அட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை

Report
361Shares

அட்லீ தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த பிகில் சுமார் ரூ 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படியிருக்க பிகில் படம் காப்பி, என்னுடைய கதை என பல சர்ச்சைகள் இருந்து வந்தது, ஒரு உதவி இயக்குனர் வழக்கே தொடர்ந்தார்.

இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘என்னுடைய சாம்பியன் படம் பிகில் படம் தொடங்குவதற்கு முன்பே தொடங்கப்பட்டது.

இந்த இரண்டு படங்களின் கதையும் ஒன்று தான், அப்படிப்பார்த்தால் நான் தான் அட்லீ மீது வழக்கு தொடரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.