இந்த ஒரு விசயத்தால் டிக்டாக்கில் பிரபலமான பெண்! என்ன நடந்தது தெரியுமா

Report
108Shares

டிக்டாக் தற்போது சர்ச்சைகுரிய செயலியாக மாறியிருந்தாலும் சிலர் அதை தங்களின் திறமையை வெளிப்படுத்தும் களமாக பயன்படுத்தி பிரபலமாகிறார்கள்.

அதில் தற்போது பிரபலமாகியுள்ளார் புதுச்சேரியை சேர்ந்த லலிதாம்பிகை. ஆரம்பத்தில் மற்றவர்களை போல புதுப்படங்களுக்கு டிக்டாக் செய்துவந்துள்ளார்.

பின் தன் அம்மாவுக்கு பழம்பெரும் நடிகைகளின் படங்கள் பிடிக்கும் என்பதால் இவரும் அக்கால நடிகைகளான சரோஜா தேவி, பானுமதி, வைஜெயந்தி மாலா போல பாடல்களுக்கு முகபாவனைகளை செய்து தற்போது இது அவரை பிரபலமாக்கிவிட்டன.

இதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைக்கிறதாம்.