தற்கொலைக்கு முயன்ற பிரபல சீரியல் நடிகை! மருத்துவமனையில் அனுமதி

Report
93Shares

அண்மையில் சின்னத்திரை வட்டாரத்தை பெரும் பரபரப்பாக்கி விஷயம் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தன் கணவரான நடிகர் ஈஸ்வர் மீது கொடுத்த புகார் தான்.

கல்யாணப்பரிசு சீரியலில் நடித்து வரும் ஈஸ்வருக்கு சக நடிகை மகாலட்சுமியுடன் தவறான தொடர்பிருப்பதாக கூறிய புகாரில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின் பெயிலில் வெளிவந்தார்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்து பொய் என கூறிவந்தார். தொடர்ந்து இந்த சர்ச்சைகள் போய்வந்த நிலையில் தற்போது மனவருத்தத்தில் ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

கடைசியாக அவர் தன் நண்பர்களுக்கு ஓரு ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் அவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

4047 total views