நித்தியானந்தா பல கோடி ரூபாய் பணத்தை இங்கு தான் பதுக்கி வைத்திருக்கிறாராம்! அம்பலமானது உண்மை

Report
448Shares

நித்தியானாந்தா சாமியார் இண்டர்நெட்டில் கலக்கும் நபர். அவரின் பேச்சை வீடியோவில் பார்த்து சிரித்தவர்கள் நம்மில் பலர் இருக்கக்கூடும். தன் மீதான குற்றச்சாட்டுகளை வழக்குகளை அணுகாமல் நாடு தப்பிச்சென்றது பலருக்கும் அதிருப்தி தான்.

அவரை குஜராத் போலிசார் தேடி வரும் வேளையில் இண்டர் போல் எனப்படும் சர்வதேச போலிஸ் உதவியை நாடியுள்ளார்கள். இதில் அவர் தென் அமெரிக்கா பகுதியில் கரிபியின் தீவு அருகே தன் சீஷ்யைகள், சீடர்களுடன் இருப்பதாக சொல்லப்பட்டது.

தற்போது அவர் பசிபிக் தீவு நாடான வனுவாட்டு என்ற குட்டித்தீவில் வங்கிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளனர்.

மேலும் வனுவாட்டு தேசிய வங்கிய போர்ட் விலா கிளையில் கைலாசா லிமிடெட்ட என்ற பெயரில் அந்த வங்கிக்கணக்கு உள்ளதாம்.

இந்த இடம் ஆஸ்திரேலியாவில் இருந்து 3600 கிமீட்டர் தூரத்தில் உள்ளதாம்.

அத்துடன் இந்த நாட்டின் தேசிய வங்கியில் முதலீடு செய்தால் வருமான வரி, கார்ப்பரேட் வரி, சொத்து வரி, வருவாய் மூல நிதி வரி என எந்த வரியும் கட்ட தேவையில்லையாம்.

நித்தி சாமியார் பலே கில்லாடி தான் போல. சர்வதேச போலிஸ் இவர பிடிப்பாங்களானு பார்ப்போம்.

19739 total views