தற்கொலை முயற்சி! டிக்டாக் பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்! இப்படியான நேரத்திலும் கேலி கிண்டல் செய்வதா?

Report
60Shares

டிக் டாக் மூலம் தன்னை நடிகர், நடிகைகளாக பலரும் காட்டிக்கொண்டனர். சினிமா வசனங்கள், பாடல்களுக்கு வீடியோ செய்து வெளியிட்டு பலரும் மகிழ்ச்சி கண்டு வந்தனர்.

அதிலும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரின் மனக்கவலையை இது போக்கியது.

அண்மையில் இந்திய அரசு டிக்டாக்கை தடை செய்து அறிவிப்பை வெளியிட்டது. இதனால் டிக்டாக் பொழுதுப்போக்கு வாசிகள் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகினர். அச்சமயம் தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு வருத்தம் தெரிவித்து திருச்செந்தூரை சேர்ந்த ஜிபி முத்து என்பவரை வெளியிட்ட வீடியோ மிகவும் வைரலானது.

அதன் பின்னர் இவரின் பழைய வீடியோக்கள் செம வைரலாக மாறின. இந்நிலையில் அவர் தற்போது தீராத வயிற்று வலியால் தற்கொலை முயற்சி செய்துகொண்டாராம்.

இச்செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்த இந்த நேரத்தில் சிலர் அவரை கேலி கிண்டல் செய்து பதிவிடுவது மிகவும் வருத்தத்திற்குரியதாகியுள்ளது.