
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் தற்போது 40 வது நாட்களை நெருங்கிவிட்டது. எந்த சீசனிலும் இல்லாதளவிற்கு இந்த சீசன் போட்டியாளர்கள் குடும்பத்தை பிரிந்து பிக்பாஸ் வீட்டிற்குள் ஆயுத பூஜையை கொண்டாடினார்கள். அதே போல தீபாவளியை கொண்டாடுகிறார்கள். கொஞ்சம் மனவருத்தம் இருந்தாலும் நிகழ்ச்சியின் மூலம் இதுவும் ஒரு புதிய அனுபவம் தான்.
முதலில் நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். பின் பாடகர் வேல்முருகன். இவரை தொடர்ந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பல சர்ச்சைகளுக்கு பேர் பெற்றது. இதில் முதல் சீசனின் சினேகன் கட்டிப்பிடி வைத்தியத்தால் சர்ச்சையில் சிக்கினார்.
அதே போல இந்த சீசனில் வேல் முருகன் சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்து சர்ச்சையில் சிக்கினார். அவரை பார்வையாளர்கள் கேலி கிண்டல் செய்து விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் வேல் முருகன் சனம் ஷெட்டியை நான் கட்டிபிடித்ததை சர்ச்சையாக்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. நாங்கள் ஜெயிக்க மாட்டோம் என நினைத்தனர். ஆனால் இருவரும் போட்டியில் வெற்றி பெற்றோம். அம்மகிழ்ச்சியில் நான் அவரை கட்டிப்பிடித்தேன். இதில் தவறான எண்ணம் எதுவும் இல்லை.
நாங்கள் இருவரும் சகோதர, சகோதரியாகவே பழகி வந்தோம். போட்டிக்கு முன்னாலும், பின்னாலும் நான் யாரையும் கட்டிப்பிடித்ததில்லை. கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் என்ன செய்தாலும் தவறு கண்டுபிடிக்கிறார்கள். சினேகனையும் என்னை ஏன் விமர்சிக்கிறார்கள் என புரியவில்லை. மற்றவர்கள் செய்தால் இதை கண்டுகொள்வதில்லை. நாங்களும் மனிதர்கள் தானே என வேல் முருகன் கூறியுள்ளார்.