நண்பனை கத்தியால் குத்தி கொலை! சினிமா இயக்குனர் கைது! ரத்த வெள்ளத்தில் கிடந்தவரின் புகைப்படம்! புத்தாண்டு இரவில் நடந்த சோக சம்பவம்!

புத்தாண்டு கொண்டாட்டம் சென்னையில் கோலாகமலாக இருக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணாமாக இந்த ஆண்டு கொண்டாட்டம் தடை செய்யப்பட்டது. கடற்கரை பகுதிகள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டை கொண்டாடட்டத்தில் உதவி இயக்குனர் ருத்ரன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தேனியை சேர்ந்த இவர் சென்னை வளசரவாக்கத்தில் தங்கி சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தன் வீட்டில் போதிய இட வசதி இல்லாததால் அய்யப்பன் தாங்கலில் உள்ள சக இயக்குனரான மணி என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவரின் நண்பர்கள் குரு சஞ்சய், ராம் குமார் ஆகியோரும் சேர்ந்து ஒன்றாக மது குடித்து விடு கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
அப்போது மணிகண்டனுக்கு ருத்ரனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் ஆபாசமாக பேசியதால் ஆத்திரமடைந்த ருத்ரன் தன்னுடைய மோதிரத்தால் அவரின் முகத்தில் குத்தியுள்ளார். இதில் மணிகண்டன் நெற்றியில் காயமடைந்துள்ளது. பின்னர் இருவரும் புகைபிடித்துக்கொண்டிருந்த சமயத்தில் மணிகண்டன் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து ருத்ரனின் வயிற்றில் குத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிழே விழுந்த ருத்ரனை அவரின் நண்பர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முதலுதவிக்குப்பின் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்யப்பட்ட போது ருத்ரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் மணிகண்டன் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.