
சமீபகாலமாக மீண்டும் அதிக கவனம் பெற்றுள்ளவர் இயக்குனர் செல்வராகவன். திரையரங்குகளில் அவரின் ஆயிரத்தில் ஒருவன் படம் மீண்டும் திரையிடப்பட்டது.
தன்னுடைய தம்பியான நடிகர் தனுஷுடன் மீண்டும் அவர் எப்போது இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. புதுப்பேட்டை 2 வருமா என கேட்டு வந்த ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அடுத்த பாகத்தையும் கேட்டு வந்தனர்.
இந்நிலையில் அவர் தனுஷுடன் ஆயிரத்தில் ஒருவன் 2 என அறிவித்துவிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வந்தது.
இதற்கிடையில் இயக்குனர் செல்வராகவனின் மனைவி கர்ப்பம், அடுத்த குழந்தையை எதிர்பார்த்திருக்கிறார்கள் என செய்திகளும் வந்தன.
தற்போது செல்வராகவனின் மகளுடன் நடிகர் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.