‘இரும்புத்திரை’ படத்தில் சமந்தாவின் கேரக்டர் என்ன தெரியுமா?

Report
26Shares

‘இரும்புத்திரை’ படத்தில் சமந்தாவின் கேரக்டர் என்ன என்பது தெரியவந்துள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படத்தில், வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில், முதன்முறையாக மனநல மருத்துவர் வேடத்தில் நடித்துள்ளார் சமந்தா. டாக்டர் ரதிதேவி என்பது அவருடைய பெயர். போலீஸான விஷாலின் மன அழுத்தத்தைப் போக்கி, அவர் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான க்ளூவும் தந்து உதவும் கேரக்டரில் நடித்திருக்கிறார் சமந்தா.

1676 total views