இல்லனா நயன்தாரா படத்துக்கு ஏன் இவ்வளவு பேரு வரான்?

Report
47Shares

ஆறாம் திணை இசை வெளியீட்டு விழாவில், நயன்தாரா படத்திற்கு எதற்கு கூட்டம் கூடுகிறது என்பதை அபிராமி ராமநாதன் தெரிவித்தார். அருண் சி. இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள படம் ஆறாம் திணை. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, எனக்கு 71 வயதாகிறது. என் ஆரோக்கியத்திற்கு காரணம் பாக்யராஜ். அவர் படம் ஒன்று பார்த்தேன். அதில் முருங்கைக்காய் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றார். இன்று வரை நான் சாப்பிட்ட முருங்கைக்காய்க்கு கணக்கே இல்லை. இது கட்டுப்படியாகாது என்று என் மனைவி எங்கள் வீட்டில் 2 முருங்கை மரத்தை நட்டார்.

நயன்தாரா பேய் இருக்கிறதா இல்லையா என்று கேட்டால் இருக்கு என்பேன். அமானுஷ்யம் என்றால் அது பேயா இல்லை முனியா ஆனால் ஏதோ ஒன்னு இருக்கு. மனுஷனால் எதை பார்க்க முடியாதோ அதை பார்க்கவே ஆசைப்படுவான். இல்லை என்றால் நயன்தாரா படத்திற்கு ஏன் இவ்வளவு பேரு வரான்?

தியேட்டர்கள் பொன்ராஜ் அவர்கள் நாங்கள் தியேட்டர்களில் கொள்ளையடிப்பதால் சின்னப் படங்கள் சாவதாக கூறினார். கடந்த ஒரு வருஷத்துல நான் 50 படங்களை வினியோகம் செய்திருக்கிறேன். அதில் பாகுபலி, மெர்சல் உள்பட 4 படம் பெரிய படம். 45 படங்கள் சின்னப் படங்கள்.

பெரிய ஸ்டார் விஜய் தற்போது பெரிய ஆளாக இருக்கிறார். அவர் முதலில் நடிச்ச படம் சின்ன படம் தான். அந்த சின்ன படத்தை நாங்கள் ஒழுங்கா ஓட்டி வசூல் தரவில்லை என்றால் அவர் எப்படி பெரிய ஆளாக ஆகியிருப்பார்?

அருவி, காக்கா முட்டை ஓடுச்சு, அருவி ஓடுச்சு. அருவிக்கெல்லாம் நாங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் எப்படி ஓடும். அருவி முதல் ஷோவில் இருந்தே ஃபுல்லாகுது. இது நல்லா இருக்கு என்று மக்களுக்கு எப்படியோ தெரியுது. அந்த வித்தை மட்டும் எங்களுக்கு தெரிந்திருந்தால் அத்தனை படத்தையும் சக்சஸ் ஆக்கியிருப்போம் என்றார் அபிராமி ராமநாதன்.

2119 total views