தனுஷ் யாருடைய மகன் என ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும்

Report
78Shares

தனுஷ் என்னுடைய மகன் தான் என்று ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும் என்று மதுரை கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் ரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்லி பெற்றோரான தங்களை பார்க்க மதுரைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் ரஜினிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் 26 முதல் ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், நாள்தோறும் ரசிகர்கள் மத்தியில் பேசும் போது கெட்ட விஷயங்களை தவிருங்கள். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து வருகிறார். தனது ரசிகர்களுக்கு ஒழுக்கம் பற்றியும், குடும்பத்தை கவனித்துக் கொள்வது பற்றியும் அன்றாடம் அட்டிவைஸ் செய்து வருகிறார் ரஜினி. ரஜினியின் அறிவுரையைப் பார்த்து கதிரேசன் என்பவர் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

தனுஷ் தங்களின் மகன் என உரிமை கோரிய மதுரையைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தான் ரஜினிக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் ரஜினி தனுஷிற்கு அறிவுரை சொல்ல வேண்டும். பெற்றோரான தங்களை பார்க்க தனுஷை மதுரைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கதிரேசன் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் என்னுடைய மகன் தான் என்று ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும். தனுஷிடம் பெற்றோரான தங்களை பார்த்துக் கொள்ள அறிவுறுத்துமாறு கதிரேசன் கேட்டுக் கொண்டுள்ளார். தனுஷ் தங்களுடைய மகன் தான் என்று உரிமை கோரி மேலூரைச் சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி மேலும் தங்களுக்கு மாத பராமரிப்பு தொகையாக ரூ. 65 ஆயிரம் தர வேண்டும் என்றும் இவர்கள் மனுவில் கோரி இருந்தனர். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து உரிமை கொண்டாடும் தம்பதி இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மனசாட்சிக்குத் தெரியும் தனுஷ் யாருடைய மகன் என்று என மதுரை கதிரேசன் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் யாருடைய மகன் என்பதற்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தாலும், கதிரேசன் தம்பதி தொடர்ந்து தனுஷை தங்களின் மகன் என்றே உரிமை கொண்டாடி வருகின்றனர்.

2840 total views