அரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்

Report
16Shares

ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் 4 ஆவது நாளாக இன்று ரசிகர்களை சந்திக்கிறார்.

கடந்த 26 ஆம் தேதி முதல் ரசிகர்கள் சந்திப்பு நடத்தி வரும் ரஜினிகாந்த் இன்று 4 ஆவது நாளாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். மாவட்ட வாரியாக நடைபெறும் இந்த சந்திப்பில் இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். தினமும் அவர் ரசிகர்கள் மத்தியில் உரை ஆற்றுகிறார்.

இன்று தனது உரையில் 31ஆம் தேதிக்கு இன்னும் இரு தினங்களே உள்ளதாக கூறியவுடன் ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து அவர், “கோவையில் எனக்கு நண்பர்கள் அதிகம் உள்ளனர். என்னுடைய குரு சச்சிதானந்த் மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “காலம் என்பது மிகவும் முக்கியமானது. சினிமா ஆனாலும் சரி அரசியல் ஆனாலும் சரி காலம் என்பது மிக முக்கியம். காலம் வரும் போது எல்லாமே தன்னைப் போல மாறும். முன்பு கோவையில் ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவைக் கண்டு சிவாஜி கணேசன் இது உன் காலம் எனக் கூறி என்னை வாழ்த்தினார். சிவாஜி முன்பு என்னை ரசிகர்கள் தலைவர் என சொன்னது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எனது ரசிகர்கள் முதலில் தனது குடும்பத்தை கவனிக்க வேண்டும்” என உரையாற்றினார்.

782 total views