சினிமா பிரபலம் திருமணம் நின்றதா..?

Report
255Shares

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் மற்றும் குணச்சித்திர நடிகருமான ஆர்.கே, சுரேஷ் சில மாதங்கள் முன்பு திருமணம் செய்ய போவதாக தனியார் தொலைக்காட்சி நடிகை திவ்யாவை அறிமுகப்படுத்தினார்.

அதைத்தொடரந்து, திருமணம் பற்றி எந்த செய்தியையும் வெளியிடாமல் இருக்க இருவருக்கும் மனஸ்தாபம், பிரிந்துவிட்டார்கள் என்று பல பத்திரிகைகளில் பேசப்பட்டது.

இந்த நிலையில் இதை கேள்விப்பட்ட அவர்கள், திருமணத்தை பற்றி கூறியதாவது: ஜாதகத்தில் சில பிரச்சனைகள் இருப்பதால் தற்போதைக்கு திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். மற்ற படி திருமணம் நின்றுவிட்டதாக கூறுவது எல்லாம் வதந்தி. யாரும் நம்ப வேண்டாம் என்று கூறினார்கள்.

மேலும், தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஆர்.கே. சுரேஷ், இவர் தற்போது, பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து வருகின்றார். அதோடு அடுத்து shikkari shambhu என்ற படத்தில் இவர் ஏற்று இருக்கும் கதாபாத்திரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

11227 total views