அஜித் செய்த இந்த செயலை, எந்த பிரபலத்தாலும் செய்ய முடியாது.

Report
123Shares

தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை பிடித்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவரது ரசிகர்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் திருமணத்திற்கு பிறகு மனைவியை நடிக்க அனுமதிக்கவில்லை.

இவர் எப்போதும் அவரது குழந்தைகளுக்கான நேரத்தை சரியாக செலவழிப்பார். குழந்தைகளை பார்ப்பதற்காக ஷாலினி நடிப்பில் இருந்து விலகினார்.

அந்த வகையில், நேற்று அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள், மகளின் பிறந்த நாளை முன்னிட்டு அஜித் செய்த வேலை குறித்து ஜியா ஆதரவற்ற குழந்தைகள் ஆஸ்ரமம் நடத்தி வரும் மொஹமெத் ஜெய்லனி கூறியதாவது: நேற்று இரவு நம் நீலாங்கரை இல்ல குழந்தைகளுக்கு திடீர் சர்ப்ரைஸாக அஜீத் வீட்டிலிருந்து பிரியாணி வந்திருக்கிறது. எனக்கே நம்பமுடியாமல் எப்படி? என கேட்டேன். அவரை இதுவரை சந்தித்ததுகூட இல்லை.

புத்தாண்டு கொன்டாட்டத்திற்கு வந்திருந்த ஒரு பெண் நண்பரின் தந்தை அஜீத்திடம் வேலை செய்வதாகவும், எதேச்சையாய் நமது இல்லத்தை பற்றி அறிந்து உடனே பிரியாணி ஏற்பாடு செய்து தனது ட்ரைவரின் மூலம் கொடுத்தனுப்பியிருக்கிறார் நடிகர் அஜீத்!

அஜீத் பற்றி இதுபோல நிறைய விசயங்களை கேள்விபட்டிருக்கையில், அது நமக்கே நடப்பது ஒரு இனிமையான அனுபவம். நமக்கே சந்தோசமாய் இருக்கும்போது பசங்களின் சந்தோசத்தை கேட்கவும் வேண்டுமா? அதனால்தான் அவர் அஜீத்! நன்றி! என்று கூறி அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அஜித் என்றும் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாது என்று நினைப்பவர் என்பது நாம் அறிந்ததே.

4825 total views