சூர்யாவை பற்றி கீர்த்தி சுரேஷ் கூறிய சுவாரசியமான தகவல் இதுவா..?

Report
405Shares

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் தான் அதிக பேர் முன்னணி நடிகைகளாக வளம் வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால், இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுடன் கதாநாயகியாக நடித்து முன்னணி கதாநாயகிகள் இடத்தை பிடித்தார்.

அதைத்தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். இவரை என்ன தான் நெட்டிசன்கள் கலாய்த்தாலும் இவருக்கும் ரசிகர்கள் உண்டு. மேலும், தற்போது இவர் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இவர் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.

இவர் அந்த பேட்டியில், என் அம்மா சூர்யாவின் அப்பா சிவகுமாருடன் நடித்த போதே நான் என் அம்மாவிடம் " நீ சூர்யாவின் தந்தையோடு நடிக்கிறாய் அதைப்போலவே நானும் ஒரு நாள் சூர்யாவோடு நடிப்பேன் பாரு..!" என்று கூறினாராம். இவ்வாறு நடக்கும் என்று தெரியாமலே நான் இப்படி கூறியிருக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார் கீர்த்தி சுரேஷ்.

13569 total views