விஜய் பட நாயகி மீது பணமோசடி வழக்கு..வெளியான திடுக்கிடும் காரணம்!!

Report
62Shares

விஜய் நடிப்பில் வெளிவந்த யூத் படத்தில் அவருடன் நடித்தவர் சிந்துமேனன்.பின் கடல்பூக்கள், சமுத்திரம், ஈரம் போன்ற தமிழ் படங்கள் உள்பட ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் அவருடைய சகோதர் ஒருவருக்கு ரூ.36 லட்சம் வங்கி லோன் வாங்க தனது சொத்துக்களை கியாரண்டி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இவர் கொடுத்த சொத்துக்களின் ஆவணங்கள் போலி என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிந்துமேனனின் சகோதரரையும் இன்னொரு பெண்ணையும் போலிசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் லண்டனை சேர்ந்த பிரபு என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்த சிந்துமேனன், தற்போது லண்டனிலேயே செட்டிலாகிவிட்டார்.

அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்வது குறித்து போலீசார் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

3213 total views