5க்கும் 10க்கும் இந்த வேலையை செய்ய முடியாது பிரபல நடிகை!

Report
132Shares

பாலிவுட்டில் புகழ்பெற்ற ஹீரோவாக விளங்கிய அனில் கபூரின் புதல்வி சோனம் கபூர், இப்போது பிரபல நடிகையாக உருவெடுத்து உள்ளார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி, பாலிவுட்டையே பரபரக்க வைத்துள்ளது.

'ஒரு தயாரிப்பாளர், படத்தில் நடிப்பது தொடர்பாக என்னை அணுகினார். அந்த படத்தின் கதை நன்றாக இருந்தபோதும், மிக குறைவான சம்பளம் தருவதாக அவர் கூறியது, எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது; 5க்கும் 10க்கும் என்னால் நடிக்க முடியாது என கூறி, அவரை திருப்பி அனுப்பி விட்டேன்' என, அந்த பேட்டியில் கூறியிருந்தார், சோனம் கபூர்.

பாலிவுட்டில் இதற்கு முன், எந்த ஒரு நடிகையும், சம்பளம் தொடர்பாக இதுபோல் வெளிப்படையாக பேட்டி அளித்தது இல்லை. இதனால், 'அனில் கபூர் மகளா இப்படி பேசுவது' என, பாலிவுட் பிரபலங்கள் ஆச்சரியத்துடன் முணுமுணுக்கின்றனர்.

6346 total views