நான்கு ஹீரோயின்கள் காட்டேரியாகும் படம்!

Report
14Shares

இயக்குனர் டீ.கே இயக்கத்தில் உருவாகும் படம் தான் காட்டேரி இப்படத்தில் 4 கதநாயகிகள் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதன்பின் மக்கள் அனைவரும் ரத்தம் குடிக்கும் பேய்தான் காட்டேரி என்று இதுவரை சொல்லிவந்த நிலையில் இதற்கு இயக்குனர் டீ.கே புதிய அர்த்தம் தந்துள்ளார். இதைப் பற்றி டீ.கே கூறுகையில் பழைய மனிதர்கள், மூதாதையர்கள் என்ற அர்த்தமும் காட்டேரி என்ற வார்த்தைக்கு உள்ளது என கூறினார்.

இந்த கதையை தான் நான் இயக்க உள்ளதாக கூறியுள்ளர் இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்ப்டத்தை விக்கி ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.என்.பிரசாத் இசை அமைத்துள்ளார். மற்றும் இப்படத்தில் ஹீரோவாக வைபவ் இருக்கிறார்.

நான்கு நடிகைகளாக சுயநலமிக்க வேடத்தில் சோனம் பஜ்வா, மனநல மருத்துவராக ஆத்மிகா, 1960ம் ஆண்டுகளில் வாழ்பவர்களாக வரலட்சுமி, மணாலி ரத்தோர் அழுத்தமான வேடங்களில் நடிக்கின்றனர்.

மற்றும் கருணாகரன், பொன்னம்பலம், ரவிமரியா, ஜான் விஜய், குட்டி கோபி நடிக்கின்றனர். இவ்வாறு இயக்குனர் டீகே கூறினார்.

1455 total views