பிங்க் படம் பாத்திருக்கேன், ஆனால் அந்த படத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை.. பிரபல நடிகை

Report
29Shares

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமாகி, அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை சுனைனா. மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நள்ளிரவில் #asksunainaa என்ற ஆஷ்டேக் செய்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். ரசிகர்கள் பொதுவாக கேட்கப்படும் சிறந்த உணவு, பிடித்தவை என கேள்விகளை எழுப்பினர்.

ஆனால் ஒரு ரசிகர் நடிகர் அஜித்குமார் நடித்து வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தீர்களா என கேட்டுள்ளார். அதற்கு சுனைனா ‘பிங்க் படம் பாத்திருக்கேன், ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்களிடையே நல்மதிப்பை பெற்றுள்ளார்.

1786 total views