விஜய்யுடன் இணைந்து நடிக்க போகிற பிக்பாஸ் பிரபலம்.. செய்தியை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..

Report
127Shares

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் கமிட்டாகியுள்ள படம் தான் தளபதி 64. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பில் அண்மையில் இந்த படம் ஷூட்டிங் துவங்கியுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை கமிட் செய்துள்னனர். விஜய்க்கு ஜோடியாக பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகன் என்பவரை தேர்வு செய்துள்ளனர்.

இதை தவிர்த்து மலையாளத்தில் இருந்து ஆண்டனி வர்கிஸ் என்பவரையும் மற்றும் நம் தமிழ் சினிமாவின் இயக்குனர் பாகியராஜின் மகனுமான ஷாந்தனுவையும் தேர்வுசெய்துள்ளார். மற்றும் ஸ்ரீமன்,சஞ்சீவ்,ஸ்ரீநாத் என்பவர்களையும் தேர்வு செய்துருக்கிறார்கள்.

இப்படி ஒரு படத்திற்கு இவுளோ பெரிய நடிகர் பட்டாளமே இருக்க பச்சத்தில் மற்றும் ஒருவர் இணைத்துள்ளார் என செய்திகள் பரவிவருகிறது. அது யார் என்றால் தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3யில் இருந்து மக்கள் மனதில் ஹீரோவாக இடம்பிடித்த தர்ஷனை கமிட் செய்திருக்கிறார்களாம்.

இந்த செய்தி தான் தற்போது அணைத்து இணையத்தளங்களிலும் பரவலாக வைரலாகி வருகிறது.