சுஜித் இறப்பால் குழந்தையை தத்தெடுக்க முடிவெடுத்த நடிகை.. நடன இயக்குநரின் பதில் என்ன?

Report
31Shares

சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிர்விட்ட சிறுவன் சுஜித்தின் இறப்பு தமிழ்நாடு முழுவதும் மனதை உருகுலைத்துள்ளது. இந்நிலையில் இது போன்று இனிமேல் எந்த இழப்பும் நடக்க கூடாது என்று பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை காஜல் பசுபதி அவரது டிவிட்டர் பக்கத்தில் சுஜித்தின் இறப்பு பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுஜித்தின் பெற்றோருக்கு சொல்லவிரும்புவது, சுஜித் நம் தேச பிள்ளையாகிவிட்டான். பெற்றோரின்றி இருக்கும் குழந்தையை தத்தெடுங்கள். சுஜித் என பெயரிட்டு வளர்த்து வாருங்கள். நீங்கள் அப்படி நினைத்தால் அதற்கு நான் குழந்தையை தத்தெடுத்து கொடுக்கிறே.

குழந்தைக்கான படிப்பு செலவையும் நான் ஏற்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் அவர்களை நாடியுள்ளார். உங்களுக்கு இந்த செய்து சென்றால் என்னை தொடர்புகொள்ளுங்கள் ஒரு குழந்தையை வளர்க்க நான் உதவுகிறேன் என்று அவரிடம் கேட்டுகொண்டார்.

இப்படிபட்ட மனது யாருக்கு இருக்கும் என்று காஜல் அவர்களின் டிவிட்டிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களையும் பாராட்டியும் வருகிறார்கள்.