ரசிகர்களை புறக்கணிக்கிறாரா நடிகர் விஜய்.. இசை வெளியீட்டு விழாவால் வைரலாகும் வதந்திகள்..

Report
10Shares

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி வரும் ஞாயற்றுக்கிழமை பிரபல தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பாகவுள்ளது.

மேலும், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவரின் பேச்சை கேட்பதற்கு ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியானது ரசிகர்களை அனுமதிக்காமல் வெறும் படக்குழுவினர் முன்னிலையில் நடத்தவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

மேலும், பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி என்னதான் ரசிகர்களுடன் நடத்திருந்தாளும், சில ரசிகர்களை உள்ளே அனுமதிக்காமல் வெளியவே நிற்க வைத்து, அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தபட்டது குறிப்பிடத்தக்கது. இதையறிந்த நடிகர் விஜய் தயாரிப்பு நிறுவனத்தினரின் இப்படியான சம்பவங்கள் நடந்தது எனக்கு மன வருத்தத்தை தந்துள்ளதால், இனியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

அதனால் ரசிகர்கள் மனது கஷ்டபடாமலும், அனைத்து வித ரசிகர்களும் எனக்கு முக்கியம் என்ற நோக்கத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் இல்லாமலும் அவர்கள் பார்க்கும்படியாகவும் இருக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரசிகர்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு வசதிகளை செய்து தருவதாக கூறியுள்ளனர்.

352 total views