கமல்ஹாசன் குடும்பமே தனிமைப்படுத்தப்பட்டார்களா?.. நடிகை சுருதிஹாசன் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

Report
891Shares

உலகையே தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு கொலைகாரன் யார் என்றால் அது கொரானா வைரஸ் என்ற உயிர் கொள்ளிதான். போரைவிட பெரும் ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது இந்த கொரானா. சீனாவில் துவங்கப்பட்ட இந்த கொரானா நாடுமுழுவதும் தீயாய் பரவி கொண்டு வருகிறது. 3 லட்த்தினையும் தாண்டி பாதிக்கப்பட்டும், 14000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதனால் அனைத்து நாடுகளும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்ற தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் வரும் 21 நாட்களுக்கு ஊரங்கு முறையும் 144 தடை உத்தரவும் பிரதமர் நரேந்திரமோடி நேற்றிரவு நேரடி ஒளிப்பரப்பில் கூறியிருந்தார். தற்போது அதனை மக்கள் நாடு முழுவதும் கடுமையாக பின்பற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவரின் மகளான நடிகை சுருதிஹாசன் சமுகவலைத்தளத்தில் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார். சில தினங்களுக்கு முன் நான் லண்டனில் சென்று இந்தியா திரும்பி இருக்கிறேன். அதனால் நான் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வருகிறேன்.

மேலும் என் குடும்பத்தினை சார்ந்த என் அம்மா சரிகா, அப்பா கமல்ஹாசன், தங்கை அக்‌ஷர ஹாசன் உள்ளிட்டோர் பல நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் சென்றுள்ளதால், அவர்களும் தனிமைப்படுத்திக் கொண்டனர் என்றும் கூறியுள்ளார். மேலும் வீட்டில் வேலையாட்கள் கூட யாரும் அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.