மூன்று பெண்கள் இல்லாமல் இறுதிசடங்கா!.. விசுவின் இறப்பால் கதறி அழுத நடிகை.. யார் தெரியுமா?

Report
225Shares

தமிழ் சினிமாவில் மேடை நாடகம், நடிகர், குணச்சித்திர நடிகர் என்றும் இயக்குநர், தொகுப்பாளர், கதை ஆசிரியர் என பல ரூபங்களை எடுத்து பிரபலமானவர் நடிகர் விசு. கடண்ட்க மார்ச் 22ஆம் நாள் சிறுநீரக பிரச்சனையால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது இறப்பு சினிமா பிரபலங்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரானா வைரஸால் 144 தடை உத்திரவால் நடிகர் விசுவின் இறுதி சடங்கு சில குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

விசுவின் இறப்பால் பிரபல நடிகை உமா ரியாஸின் அம்மாவுமான நடிகை கமலா காமேஷ் மிகவும் வருந்தி அழுதுள்ளார். நடிகை கமலா காமேஷ் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமானவர். கமலாவின் நடிப்பை பார்த்து தனது நாடகங்களில் நடிக்க சொல்லி அழைத்தார். அதன்மூலம் விசுவின் 6 படங்களில் நடித்து படவாய்ப்பினை பெற்றார்.

அதன்பின் சுமார் 600 படங்களில் நடித்தும், விசுவின் கச்சேரிகளிலும் நடித்து வந்தார். சமீபத்தில் கமலா பேட்டியொன்றில் நடிகர் விசுவை பற்றிய சுவாரஷ்யமான சம்பவங்களை பரிமாறிக் கொண்டார். என் கணவரின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர் நடிகர் விசு. அதனால் எப்போது என் வீட்டில் தான் இருப்பார். அவர் இருக்கும் நேரம் சந்தோஷமாக இருப்போம் என்று கூறினார்.

மேலும், திரைத்துறைக்கு என்னை அறிமுகப்படுத்தி இவ்வளவு பெரிய இடத்திற்கு நான் வர விசு செய்த உதவியால் தான். ஆனால் அவரது இறப்பு பெற்ற மூன்று மகளும் இல்லாமல் நடந்ததை எண்ணி வலியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். பின் மகள்கள் யாரும் வரவில்லையா நிஜமாக சொல்லுங்கள் என்று கதறி அழுதுள்ளார் நடிகை கமலா காமேஷ்.