புகைப்படத்தை வெளியிட்டு உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சீரியல் நடிகை.. யார் தெரியுமா?

Report
501Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தவகையில் தற்போது நட்சத்திரங்களாக பல தொலைக்காட்சிகளில் இருந்து வந்தவர்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் நடிகை வித்யா பிரதீப்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் தான் நாயகி. தெய்வமகள் சீரியலுக்கு அடுத்ததாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல் முதல் எப்பிசோட்டினை கடந்த 2018ல் ஆரம்பித்து இந்த சீரியல் இரண்டு வருடங்களாக ஒளிப்பரப்பாகி வெற்றிப்பெற்று வருகிறது. இந்த சீரியலில் முதலில் நடிகை விஜயலட்சுமியும், நடிகர் திலிப் ராயனும் நாயகன் நாயகியாக நடித்து வந்தனர்.

சில காரணங்களால் விஜயலட்சுமி நாயகி சீரியலில் இருந்து விலகியதால் நடிகை வித்யா பிரதீப் நடித்து வருகிறார். தொலைக்காட்சி டி ஆர் பியில் முதல் ஐந்து இடங்களிலும், யுடியூப்பில் டிரெண்டிங்கிலும் நாயகி சீரியல் இடம்பெற்று வருகிறது.

சீரியல் நடிகையாக வளம் வந்தபின் பல ரசிகர்களை தன் நடிப்பால் கவர்ந்து வருகிறார் வித்யா. அதன்பின் தடம் படத்தில் சிபிசிஐடியாக நடித்தும், களரி, பசங்க 2 ஆகிய படத்தில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் நடிகையாக அறிமுகமாவதற்கு முன் வித்யா ஒரு மருத்துவமனையில் கண் மருத்துவராகவும், ஆராய்ச்சியாளராகவும் செயல்பட்டு வந்தவராம்.

இதனை உறுதிப்படுத்தியும் அவரது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார் நடிகை வித்யா பிரதீப்.