கொரானா சமயத்தில் விஷால் தங்கை செய்த செயல்!.. என்ன செய்தார் தெரியுமா!..

Report
261Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அர்ஜுனின் உதவி இயக்குநராக பணிபுரிந்து செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷால். இதையடுத்து சண்டக்கோழி, திமிரு, வெடி, அவன் இவன் படத்தின் மூலம் பிரபலமானார்.

இதையடுத்து நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு செயலாளராக பதிவி ஏற்றார். தற்போது சங்கத்தில் பல பிரச்சனைகளால் தேர்தல் தள்ளிப்போனது.

கொரானா சமயத்தில் படப்பிடிப்பு இல்லாமல் பலருக்கு உதவி செய்து வருகிறார் விஷால். அவரது தங்கையான நீஷ்மா ஹைதராபாத்தில் மருத்துவராக இருந்து வருகிறார். அங்குள்ள மருத்துவமனைக்கு தன்னால் முடிந்த சில மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். பிபியி மருத்துவ உபகரணங்களை அளித்தும் வருகிறார்.

இதையறிந்த விஷால் தமிழகத்திற்கும் இதுபோன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்டு தமிழக மருத்துவமனைக்கு 200 பிபியி மருத்துவ உபகரணங்களை அளித்து உதவியை செய்துள்ளார். இதனை பிரபலங்கள் பலர் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் கூறி வருகிறார்கள்.