மகனுக்காக அமெரிக்காவில் செட்டிலான நடிகர் நெப்போலியன்.. இப்படிபட்ட நோயிலும் சாதித்த மகன்..

Report
1429Shares

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் நெப்போலியன். தற்போது நடிப்பு தவிர்த்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து இரு பிள்ளைகளுக்கு தந்தையான நெப்போலியன் தற்போது மூத்த மகனுக்காக அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.

இதற்கு காரணம் மூத்தமகனான தனோஷ் பிறந்ததிலிருந்து Muscular Dystrophy என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். இந்த நோயினை மகன் வாழ்விலிருந்து நீக்க அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். ஓரளவிற்கு முன்னேறிய தனோஷ் பள்ளிப்படிப்பை Sunset Middle School, Ravewood High School முடித்தார். இதன்பின் அமெரிக்காவில் பெரிய பல்கலைக்கழகமான லிப்ஸ்காம்ப் என்ற பல்கலைக்கழத்தில் பி.ஏ. அனிமேஷனை 4 ஆண்டுகள் பட்டபடிப்பை முடித்துள்ளார்.

இதையடுத்து, கொரானா சமயத்தில் பட்டப்படிப்பு விழாவை காணொளி மூலம் பட்டத்தினை வாங்கியுள்ளார். இப்படியொரு கொடிய நோயிலிருந்து தன் மகன் வென்று சாதனை படைத்து விட்டான் என்று அவரும் அவரின் மனைவி இளைய மகன் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படியான நோயிலிருந்து விடுபட பெற்றோர்களின் முழு பங்கும் தைரியமு தான் அதிகமாக மருந்தாக இருந்தது என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார் நெப்போலியன்.