ரகுமானையே மிஞ்சிய குரலுக்கு சொந்தகாரியாக இருந்த பிரித்திகா... இப்போ எங்கே போனார்?

Report
893Shares

தமிழ் சினிமாவில் பல கலைஞர்களை உருவாக்கி வரும் தனியார் தொலைக்காட்சி பெரும் பங்கேற்று வருகிறது. அந்தவகையில் நடிகர், நடிகை, சிங்கர், காமெடியன் என்று அனைத்து வகையான கலைஞர்களையும் உருவாக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.

அந்தவகையில் உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். இதில் கலந்து கொண்டு சூப்பர் சிங்கர் 5யின் டைட்டிலை தட்டிச்சென்றவர் தான் பிரித்திகா. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து சரியான பயிற்சிக்கூட பணமில்லாமல் தன் காந்தகுரலால் மெய்சிளிர்க்க வைத்தவர் தான் பிரித்திகா.

கிராமத்து மண்வாசனை மாறாமல் பாடும் இவர் தற்போது சூப்பர் சிங்கர் முடிந்தபிறகு வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடல்களை பாடிவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் வா ரயில் விட போலாமா என்ற பாடலிற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடி அசத்தியுள்ளார். இதன்பின் சில பாடங்கள் பாடினாலும் முக்கிய வாய்ப்புகள் கிடைக்காமல் சொந்த ஊரிலேயே இருந்து வருகிறார்.

டைட்டில் வெற்றிபெற்ற பிரித்திக்கா தனியாக யுடியூப் சேனலை ஆரம்பித்த கொரானா விழிப்புணர்வு சம்மந்தமான பாடல் ஒன்றினை பாடி வெளியிட்டுள்ளார்.