கிரிக்கெட் வீரருடன் ரொமான்ஸில் ஈழப்பெண் லாஸ்லியாவா?.. வைரலாகும் புகைப்படம்..

Report
1344Shares

இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் இவர் கலந்து கொண்டு ஈழப்பெண்ணாக பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் காதல் போட்டியாளர்களுடன் சண்டை என கிசுகிசுக்களில் மாட்டி பேசப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தானுடண்டு தன் குடும்பமுண்டு என சில மாதங்களை கழித்தார். தற்போது சில படங்களில் கமிட்டாக போட்டோஹுட்டும் எடுத்து வெளியிட்டார்.

தற்போது இந்திய கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சாளர் நடிக்கும் ப்ரண்ட் ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அப்படத்தின் ஃப்ர்ஸ் லுக் போஸ்ட்டர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி பேசப்பட்டு வருகிறது.